மயிலாடுதுறை, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் அச்சிறப்பு மிக்க பங்குனி உத்திர பால் குட திருவிழா நடைப்பெற்றது. காவிரி துலா கட்டத்தில் சிவன் கோயிலிருந்து புறப்பட்ட அப்பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேந்தங்குடி பகுதியை சென்றடைந்தது.
அந்நிகழ்விற்காக அப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உள்ள வீடுகள் தோறும் வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு அர்ச்சனை செய்தனர். மேலும் ,பால் குட பவனியின் போது, மேள தாளம், வான வேடிக்கை முழங்க, நாட்டிய குதிரை ஆட்டமும், பச்சை காளி, பவள காளி உத்திரகாளி என ஒன்பது காளிகளின் ஆட்டமும், அதில், கோழிகளை வாயில் கடித்து இரத்தம் குடிந்த நிகழ்ச்சி பக்தர்களை பக்தி பரவசத்திற்கு உள்ளாக்கியது.
மேலும் பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் ஜடா முடி அய்யனாரின் அருள் வந்து ஆடியது, பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் ஜடா முடி அய்யனாருக்கு பால் குட அபிசேகம் நிறைவுற்று, 1000 க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜடா முடி அய்யனாரின் அருள் பெற்றனர்.






















