திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்டம், மயிலாட்டம். தப்பாட்டம், குழுவினர்களோடு மேளதாளங்களுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார்.
முன்னதாக என்.ஜி.ஓ காலணியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் வாக்காளர் அழைப்பிதழ்களை வழங்கி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்து அப்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பிரபு சங்கர் வழங்கினார்.
தொடர்ந்து பெரியகுப்பம் TELC நடுநிலைப்பள்ளி மற்றும் கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு உரிய குடிநீர் வசதி, மின்விளக்கு, தளம், கழிப்பறை வசதி. மாற்றுத்திறனாளி களுக்கான சாய்வு தளம் போன்ற அனைத்து விதமான வாக்காளர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும் என உதவி தேர்தல் அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலருடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி, திருவள்ளூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செல்வி. சுபாஷினி, வட்டாட்சியர் வாசுதேவன். மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.