திருவள்ளூர், மார்ச். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர்  தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன் என்றும்   திமுக கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐ ஏ எஸ் பத்திரிகையாளரை சந்திப்பில் தெரிவித்தார்.

இன்று திருவள்ளூரில் நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான தூரைசந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

அதில் நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். மேலும் அக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்,

அதனைத் தொடர்ந்து, நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நான் சென்னையில் பிறந்தாலும், திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில்தான் அவர் வளர்ந்ததாக தெரிவித்தார். மேலும் அதனால் தனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நன்கு அறிமுகம் உள்ளதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் நான் ஐஏஎஸ் படிப்பு முடித்த பின்னர் கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிப் புரிந்துள்ளேன் எனவும், அரசியல் சூழ்நிலை பிடிக்காமல் பணியிலிருந்து விலகியதாகவும், இருப்பினும் அடுத்து வரும் தலைமுறைகள் இந்த சமுதாயத்தில் என்னைப் போல பெரிய அதிகாரிகளாக வளர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருவதாக அப்போது வேட்பாளர் சசிகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சிபுரிந்து வரும் பாஜக அரசுப் பற்றி அவர் குறிப்பிடுகையில் இந்தியா அடைந்திருந்த வளர்ச்சியை தற்போது பாஜக பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக கல்வியில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் பாஜக அரசு தடுத்து நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக மேலும் குற்றச்சாட்டினார்.

இன்னும் இந்நிலை நீடித்தால் கல்வி மேலும் 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், வரக்கூடிய ஐந்து ஆண்டு காலத்தில் திருவள்ளூர் தொகுதியை மிகப் பெரியளவில் வளர்ச்சியடைய செய்வேன் எனவும், மேலும் நான் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்ததால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து எப்படி பெற வேண்டும் என வழிமுறைகள் அறிந்துள்ளதாகவும் அதன்படி வழிமுறைகளை பின்பற்றி வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவேன் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாநிலத் துணைத் தலைவர் ஏகட்டூர் ஆனந்தன், திருவள்ளூர் நகர தலைவர் ஜோஷி, மற்றும் கோவிந்தராஜ், அஸ்வின் குமார், தளபதி மூர்த்தி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பெரும்பான்மையினர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here