திருவள்ளூர், மார்ச்.19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

தமிழக ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கை மேற்கொள்வதை நேரில் சென்று பார்வையிட்டு மேலாய்வு மேற்கொண்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரிகளிடம் கூறுகையில் தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியான பொன்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளாமல் அனுப்பக்கூடாது என்றும் பணிகளில் எவ்வித சுணக்கம் இல்லாமல் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி வட்டாட்சியர் மதியழகன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here