ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் பணிமனை.
மேலும் அப்பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் திமுகவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக 19 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சங்கத்தில் இருந்து விலகி இன்று தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவையில் தங்களை உறுப்பினர்களாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜன் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஊத்துக்கோட்டை பணிமனை நுழைவாயிலில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவையின் புதிய பெயர் பலகை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.























