திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இன்னர்வீல் பெண்கள் சங்கம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து திருவாரூர் நகராட்சி வரை உரத்த முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றார்கள். அப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அப் பேரணியின் பொழுது மாணவிகள் சாதனை புரிந்த பெண் சாதனையாளர்கள் போல வேடமிட்டு வந்திருந்தார்கள். அதில் கல்லூரி மாணவி ஒருவர் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ போல வேடமணிந்து வந்திருந்தார். மேலும் அவருடன் அவரது உதவியாளர் வேடம் அணிந்து இருந்த நபரும் வந்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஆறாவது இடம் பெற்று, மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்க்கையில் கல்வியைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேறுவது என்று வழிகாட்டுவது போன்ற பல்வேறு நல்காரியங்களை சமுதாயத்திற்கு செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஶ்ரீ சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கல்லூரி மாணவித் தெரிவித்தார் மேலும் அவரை தமது ரோல் மாடலாக கொண்டிருப்பதாலும் மேலும் அவரை கௌரவிக்கும் விதமாகவும் அவரது உருவம் பொருந்திய வேடமணிந்து பேரணியில் வந்ததாக தெரிவித்தார்.அது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.






















