கும்பகோணம், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருப்பதால்  தாலுக்கா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன் காரணமாக வருமான சான்று சாதி சான்று உள்ளிட்ட பிற சான்றுகள் பெற முடியாமல் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கும்பகோணத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முது நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் என  இரண்டு கட்ட போராட்டங்களை நடத்திய வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர்  கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை  அலுவலர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் செந்தில் குமார்  தலைமையில் நடைபெற்றது.

அதில் வட்ட பொருளாளர் சசிகுமார், மற்றும் அரசு ஊழியர் சங்கம் பொறுப்பாளர்கள் அன்புமணி, வெங்கடேசன், அலெக்ஸ் பாண்டியன், பிரபாகரன் ஓய்வூதியம் சங்க பொறுப்பாளர் பக்கிரிசாமி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

அதைப் போன்று திருவிடைமருதூர் வட்ட தலைவர் அமுதா, பாபநாசம் வட்டத் தலைவர் வரதராஜன் தலைமையில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனால்  தாலுகா அலுவலகத்தில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. மேலும் அதன் காரணமாக வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தடைப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here