மீஞ்சூர், ஏப். 17 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், இஸ்லாமியர்களின் புனித மாதமாகப் போற்றப்படும் இரமலான் மாதத்தினை முன்னிட்டு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் இப்தார் நோன்பு எனப்படும் இரமலான் சமத்துவ நோன்பு திறப்பு விழா நடைபெற்றது,

மேலும், இந்நிகழ்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ்,பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர் அபூபக்கர், வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஷேக் அகமது, வழக்கறிஞர் முகமதுஅலி, உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்,

மேலும் இந்நிகழ்ச்சிக்கு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் தலைவர் அனிபா, செயலாளர் சையத்அலி, பொருளாளர் அக்பர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட விசிக செயலாளர் காட்டூர் கோபி நாயனார், ஆகியோர் இச்சமத்துவ இரமலான் நோன்பினை சிறப்படையச் செய்தனர்.

மேலும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அனைவரும் இதுப்போன்ற நிகழ்வில் சமத்துவம் மற்றும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடித்து வருவது நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்து வருவதாகவும், மேலும் தாங்களும் இந்நிகழ்வில் பங்கேற்றது எங்களுக்கு மனமகிழ்வை அளிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விழாவில் பொன்னேரி விமல்ராஜ், விசிக சிவராஜ், பாபு (எ) அஜிஸ், ஜெயலட்சுமி தன்ராஜ், நக்கீரன், உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அனைத்து சமூதாயத்தைச்சார்ந்த சாதி மதம் கடந்து நல்லிணக்க உணர்வோடு பங்கேற்று இவ்விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here