தஞ்சாவூர், மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இன்று தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. அதுப்போன்று அத்தேர்வினை தஞ்சை கல்வி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 592 மாணவர்களும், 8 ஆயிரத்து 320 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 912 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 88 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 891 மாணவர்களும், 6 ஆயிரத்து 3 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 894 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 227 பள்ளிகளை சேர்ந்த 12,483 மாணவர்களும், 14 ஆயிரத்து 323 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 806 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு 110 மையங்களில் நடக்கிறது. வினாத்தாள்கள் தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள 3 வினாத்தாள் கட்டு காப்பக மையத்திலும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டு காப்பக மையத்திலும் என மொத்தம் 5 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியைகள் அச்சம், பதற்றம் அடையாமல் தேர்வு எழுத வேண்டும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.