திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருவாரூர், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர  போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரை இழிவாக பேசிய திமுக எம்பி ஆண்டிமுத்து ராசா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ் ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆண்டிமுத்து ராசாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.. இதனிடையே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6.00 மணிக்கு அவர்களை மீண்டும் விடுவித்தனர்.

சாமி. தினேஷ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைப்பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், கோவி. ராமலிங்கம் மாவட்ட செயலாளர் கிடாரம் பாஸ்கரன் நகர ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here