எல்லாபுரம், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில்,  கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்களை மிரட்டும் தோனியில் பேசியும் அநாகரிகமாக நடந்துக் கொண்டாதாகவும், மேலும் அக்கூட்டத்தில் பங்கேற்ற மண்டல துணை வட்டார அலுவலர் பாலாஜி கிராம சபை கூட்டம் தொடங்கும் போதே, பங்கேற்ற மக்களிடம் கையெழுத்து பெற்றதாகவும், மேலும் கூட்டத்தில் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையான பதில் தராமல் இருந்ததாகவும், அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜனநாயக மாண்பையே சிதைக்கும் வகையில் நடந்துக் கொண்ட மண்டல துணை வட்டார அலுவலர் பாலாஜி மற்றும் தாராட்சி ஊராட்சித் தலைவரின் கணவர் செஞ்சுவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதை வலியுறுத்தியும் முறையற்ற வகையில் நடைப்பெற்ற அக்கிராம சபாக் கூட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் கிராம சபாக் கூட்டத்தை நடத்தி நியாமான முறையில் மக்களின் பிர்ச்சினைகள் மற்றும் அடிப்படை தேவைகளை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்னெடுத்து, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் தாராட்சி ஆண்கள் கிளை செயலாளர் திருப்பதி தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் கங்காதரன், கன்னியப்பன், பத்மா, உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

நிறைவாக வட்டக் குழு உறுப்பினர்கள் பாலாஜி, அருள், வேலன், ரமேஷ், ரம்யா, சந்துரு, மற்றும் பெண்கள் கிளை செயலாளர் மஞ்சுளா வேலன் நன்றிவுரை நிகழ்த்தினார்கள்.

மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாராட்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை தொடர்ந்து உரக்க எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here