திருவாரூர், ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக ஜெயராமன் …

திருவாரூர் தெற்கு வீதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வை செல்வராஜ் ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது…

முதல் முதலில் நான் பிரச்சாரம் செய்து கைது செய்யப்பட்ட பெருமைமிகு நிகழ்வு நடைப்பெற்ற இடம் திருவாரூர் அது என்னுடைய ஊர் கலைஞர் என்ற உலக வரலாற்றிலேயே தான் நின்ற அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான் அச்சிறப்பிக்கு நகரில்தான் தற்போது நமது தோழர் செல்வராஜ்க்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

தொடர்ந்து அவர் உலக வரலாற்றிலேயே சூடு சொரணை அற்ற கேடுகெட்ட ஒரு மானங்கெட்ட அரசியல்வாதி பாதம் தாங்கி பழனிசாமிதான் எனவும், மேலும் அவர் சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். பச்சை துண்டு போட்டவர் என கூறி கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி பச்சை துரோகம் செய்தவர்.

தற்போது மகளிர் கட்டணம் இல்லா பேருந்து என்றால் அது ஸ்டாலின் பஸ் எனமகளிர் மனதில் நிறைந்துள்ளது எனவும் மேலும் அப்பேருந்தில் மூணு வருடத்தில் 465 கோடி பயணங்களை இலவச பயணிகள் மேற் கொண்டுள்ளனர் எனவும், திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே 3 கோடியே ஏழாயிரம் பெண்கள் பயணங்கள் மேற் கொண்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையான திட்டம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கஜா புயல் மிக்ஜா புயல் போன்ற பேரிடர்களின் போது வராத பிரதமர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறார் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலே வீடெடுத்து தங்கி ஊர் ஊரா சுற்றி வந்தால் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் வை செல்வராஜ் மற்றும் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here