திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
மேலும் அப்பொதுக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது அதன் படி திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும், புதிய பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விடுவதை கண்டித்தும், விவசாயிகளுக்கு 100% இழப்பீடு தர வேண்டும் எனவும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் இடிக்கப்பட்டு சிறு சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் அய்யா சின்ன அய்யா அறிவிக்கும் கூட்டணிக்கு முழுமையாக உழைத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஒரு மனதோடு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அப்பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது.
மேலும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் ஒன்றிய தலைவர்களிடம் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பொறுப்பாளர்களிடம் நேரடியாக ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் ஏ.கே.ஐயப்பன் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குமார் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான காசிநாதன் பட்ஜெட் ராஜேந்திரன் மனோகரன் கோவிந்தராஜன் நரசிம்மன் நகர தலைவர் நாகராஜன் நகர செயலாளர் ராஜேந்திரன் தீபக்ராஜ் உள்ளிட்ட கட்சியின் முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: ஏ.கே.ஐயப்பன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்.




















