நன்னிலம், டிச. 19 –

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில் ஒருவர் தப்பிவோடி விட நான்கு பேரை கைது செய்து நன்னிலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் காவல் துறையினர் விரட்டி வரும் போது  கொள்ளையினர் வந்த கார் சேற்றில் சிக்கியதால்  காவல்துறையினரிடம் பிடிபட்டனர்..

மதுரை பகுதியைச் சேர்ந்த 5  கொள்ளையினர்  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். விபரம் அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஸ் சிங் உத்தரவின் பேரில், காவல்துறையினர் கொள்ளையினரை பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில், அக் கொள்கையினர் கும்பல் அங்கிருந்து தப்பித்து, TN 65 6539 என்ற பதிவு எண் உள்ள டாடா சுமோ காரில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மார்க்கமாக தப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் மற்றும் திருவாரூர் மாவட்ட 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இணைந்து அந்த காரை விரட்டி வந்துள்ளனர்.

அப்போது நன்னிலம் அருகே  காவல்துறையினரிடம் இருந்து கொள்ளயர் கும்பல் தப்பிப்பதற்காக பணங்குடி என்ற பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் காரை ஓட்டி சென்றுள்ளனர்.

அத்தெருவில் கொள்ளையர்கள் சென்ற கார் சேற்றில் சிக்கி நின்றுள்ளது. பின் தொடர்ந்து வந்த காவல்துறையினர் கொள்ளயர்களின் காரை சுற்றி வளைத்தனர். அப்பொழுது காரில் இருந்து தப்பி ஓடிய  கொள்ளயர்களில்  நான்கு பேரை பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும் காரை சோதனையிட்ட  காவல்துறையினர் காரில் இருந்த கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கொள்ளைக்கு பயன்படுத்தக்கூடிய பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்..

மேலும் இது குறித்து நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.. மேலும் பிடிப்பட்ட கொள்ளையர்களை  காவல்துறையினர் கைது செய்து நாகப்பட்டினம் கொண்டு சென்றுள்ளனர்.. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதன் பேரில்

காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் ஐந்து பேரும்

மதுரை சேர்ந்த

1.கண்ணன்

2.பக்ருதீன்

3.அஸ்வின்

4.பாண்டியன்

மற்றும்

கும்பகோணம் பகுதியை சேர்ந்த

  1. ராஜேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here