சென்னை, ஆக. 23 –  

கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுப்படுத்த உள்ளது.

அதனை எதிர் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் அத்திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் இத்திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும்சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்து அவ்விழாவினை சிறப்பிக்கும் படி நேற்று முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கல்விப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அனைத்துப் பள்ள நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டு அதன் முதற்கட்டமாக 1545 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலைவுணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது வரை பயனடைந்து வருவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள 31, 008 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சர் காலைவுணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் நடப்பாண்டில் விரிப்படுத்திட ஜூன் மாதம் 7 ஆம் தேதியன்று அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச்சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இச் சீரிய முன்னெடுப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் தமிழ்நாட்டின் வரலாற்று பொன்னேட்டில் பதிக்கப்படயிருக்கும் இத்திட்டத்தினை வருகிற 25.08.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் தொடங்கி வைக்கவுள்ளதாகவும், மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளதாகவும், அதுப்போன்று மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் இச்சீர்மிகு திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பித்திட திமுக, அதிமுக,காங்கிராஃ, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here