கும்பகோணம், ஆக. 12 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாத்தூர் கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், அதனை கண்டித்து அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் கும்பகோணம் திருவாரூர் நன்னிலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானர்கள்.
கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் அந்தோனியார் கோவில் தெரு, தோப்பு தெரு பகுதிகளில் 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளானதாக தெரிவித்தும், இம்மின் வெட்டு குறித்து அப்பகுதி மின் வாரிய அலுவலகம் அலட்சியப் போக்குடன் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அச்செயலைக் கண்டிக்கும் வகையில் ப்பகுதி மக்கள் திராளக ஒன்றிணைந்து, கும்பகோணம் திருவாரூர் நன்னிலம் சாலையில் மாத்தூர் திருமலை ராஜம் ஆற்று பாலத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அவ்வழியாக பள்ளிக் கல்லூரி மற்றும் பணிக்கும் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். அத்தகவலறிந்து அங்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் வெகுநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் அப்பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை,
மேலும் அவர்கள் மின்துறை உயர் அதிகாரி வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக தெரிவித்த நிலையில் சாலை மறியல் போராட்டம்தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.






















