திருவாரூர். ஆக. 04 –

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த  ரவி என்பவர் தலைவராக உள்ளார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ள தனசேகரன் என்பவர் பல்வேறு ஆவணங்களை திருத்தி நிதி முறைகேடுகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர்  முறைகேடில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

மேலும் இதற்கு முன்பாக கூட்டுறவு சங்க செயலாளராக இருந்த ஜெயபால் என்பவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே 16 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ஓய்வு கால பண பலனை பெறுவதற்கு வழிவகை செய்ய துணை போனதாக கூறி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா  கச்சனம் கூட்டுறவு சங்க தலைவர்  ரவி என்பவரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here