திருவாரூர், ஜூலை. 18 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இன்று காலை சுமார் 11 மணியளவில், கருப்பு சட்டையணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
“ஏலும் இச்செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கர்நாடகா அரசு தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததுடன் காவிரியின் குறுக்கே அணை கட்டிய தீருவோம் என்று சவால் விடுகிறது. இந்நிலையில் அதன் கூட்டணி கட்சியான திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டு தமிழக விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. எனவும் மேலும் அதனை வன்மையாக கண்டிக்கும் வகையிலும், திமுக அரசுக்கு பாஜக சார்பில் கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் இப்பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நாங்கள் அனைவரும் கருப்பு ஆடைகள் அணிந்து வந்துள்ளோம் என அப்போது அவர்களது கருத்தினை பதிவு செய்தார்கள்.
மேலும் இப்பிரச்சினையில் மாநில பாஜக தலைமையின் வழிகாட்டுதலின் படி செயல்படுவோம் எனவும், திமுக அரசின் தில்லுமுல்லுகளை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக தொடர்ந்து வெளிக்கொணர்வோம் என அப்போது செய்தியாளர்களிடம், தமிழக விவசாய அணி பிரிவு மாநில துணைத்தலைவரும், தென்னை நலவாரிய உறுப்பினருமான பண்ணை வயல் இளங்கோ தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் திமுக ஆட்சிக் காலத்தில்தான் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே நவீன் ஓரங்கி ஹேமாவதி போன்ற அணைகள் கட்டப்பட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கிடைக்க விடாமல் செய்யப்பட்டது என தெரிவத்தார்.
மேலும் கர்நாடகாவில் உள்ளது போல் தமிழக ஆறுகளில் தடுப்பணைகள் ஏதும் கட்டப்படாமல் மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீர் சேமிக்கப்படாமலேயே கடலில் வீணாக கலக்கப்படுகிறது எனவும், திமுகவின் நீண்ட கால ஆட்சியில் இது பற்றி கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் கடந்த முறை ஆட்சி செய்த பாஜக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை அவ்வப்போது தந்து தமிழக விவசாயிகளுக்கு எவ்விதமான குறை இல்லாமல் நடந்து கொண்டது எனவும், ஆனால் தற்பொழுது ஆளும் காங்கிரஸ் அரசு தமிழக விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று கூறுவதுடன் சட்டத்திற்கு புறம்பாக காவிரியில் குறுக்கே அணை கட்ட துடிக்கிறது இதை திமுக அரசும் தட்டி கேட்காமல் கூட்டணி என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுகிறது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் எப்படி தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கொடுக்கப்பட்டதோ அது போல் இப்பொழுதும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வார் என்பதுடன் தமிழக மக்களுக்கு எதிராக காவிரியின் குறுக்கே அணை கட்ட ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது எனவும், தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் மேலிடப்பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொது செயலாளர் C செந்தில் அரசன் பத்திரிகையாளர் அனைவரையும் வரவேற்றார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டூர் ராகவன் ரங்கதாஸ், சி எஸ் கண்ணன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கழுகு சங்கர் மாவட்ட பொருளாளர் அட்சய முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருக்கும் நகர தலைவர் எஸ் கணேசன் நன்றி தெரிவித்தார்.




















