போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேர்வு எழுத கால நீடிப்பு தரக்கோரி ஆட்சியரிடம் மனு வழங்கினர்
தேர்வு எழுத கால அவகாசம் தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன்
செங்கல்பட்டு, செப். 3 –
தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இதுநாள் வரை கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலேயே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று உள்ளதாகவும்,
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில்,
தேர்வு குறித்து திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கால அவகாசம் இன்றி தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதனால் தேர்வுக்கு தயாராகி எழுதும் வகையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத இருந்த ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களில் பெரும்பாலானோர் தேர்வினை புறக்கணித்து உள்ள நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதின் காரணமாக மாணவ மாணவிய பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு எழுத கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனுவினை அளித்தனர்.




















