பொன்னேரி, ஜூலை. 02 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,

மேலும், ஜமாபந்தி முகாமில் பொன்னேரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி, ஆரணி பேரூராட்சி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய இரண்டு ஒன்றியத்தில் உள்ள பொது மக்களிடமிருந்து, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை ,வீட்டு மனை பட்டா, நில ஆக்கிரமிப்பு, நில அளவை செய்தல் உள்ளிட்ட  உதவிகளுக்காக அவர்களிடமிருந்து, 1412 மனுக்கள் பெறப்பட்டு, அதில்  501 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மேலும் மீதமுள்ள 916 மனுக்கள் மீது தொடர் பரிசீலனை பொன்னேரி வருவாய் மற்றும் துறைச்சார்ந்த துறைகள் சார்பில் நடைப்பெற்று வருவதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமையிலும், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் வரவேற்று உரை நிகழ்த்தினார். மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இவ்விழாவில் நகராட்சி மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், சோழவரம் ஒன்றிய குழு துணை பெரும் தலைவர் கருணாகரன்,திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், வருவாய் துறை அலுவலர்கள் ஜெய்கர்பிரபு ,பாலமுருகன், மோகனரங்கம், கந்தன் ,சஞ்சீவி பெருமாள் ,அருணாச்சலம் ,கீதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊழியர்கள் ,பாலச்சந்தர், விக்னேஷ் உதயன், அத்திப்பட்டு புருஷோத்தமன் ,மீஞ்சூர் அபூபக்கர், குருசாலமன் உள்ளிட்டவர்களும், மேலும் திரளான அப்பகுதி மக்களும் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here