கும்பகோணம், ஏப். 03 –
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று அத்திருக்கோயில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை திருத்தேரின் முன் செல்ல, அத்திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருத்தேரோட்ட விழாவில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அத்திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து அத்திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்த சுவாமியை தரிசனம் செய்தும் உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இத்திருக்கோயில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றானதும், நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றானதுமான கும்பகோணம் பெரியநாயகி சமேத நாககேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் அவ்விழா அத்திருத்தலத்தில் உள்ள கொடிமரத்தில் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09 ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள அத்திருக்கோயிலின் திருத்தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இத்திருத்தேரோட்ட விழாவில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும், இத்திருத்தேருக்கு முன்பு விநாயகர் சிறிய கட்டுத் தேரில் உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தேரோட்டத்திற்கு முன்பாக, நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்பு செல்ல திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் மகாமகத் திருக்குளத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது. என்பது குறிப்பிடதக்கதாகும்.





















