திருநாகேஸ்வரம், மார்ச். 26 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருநாகேஸ்வரம் மேல மடவளாகம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், மேலும் இவர் வீட்டில் உள்ள ஏசி பழுதடைந்த்தைத் தொடர்ந்து,  ராஜேந்திரன் கும்பகோணத்தில் உள்ள சுபா ஏஜென்சி எனும் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இந்நிலையில் அந்நிறுவனம் ராஜேந்திரன் வீட்டில் உள்ள ஏசியில் பழுது நீக்க தாராசுரம் பகுதியைச் சேர்ந்த ஷேக்அலாவுதீன், மற்றும் கணேசன் என்ற இரு ஏசி மெக்கானிக்கை அங்கு அனுப்பிவுள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் ராஜேந்திரனின் மொட்டை மாடியில் உள்ள ஏசியில் கேஸ் ஏற்றும் நேரத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும், மேலும் அவ்விபத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்த மெக்கானிக் இருவரும் பலத்த காயங்களுடன் தரையில் சரிந்து இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெரும் சத்தம் கேட்டு வீட்டின் கீழ் பகுதியில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பதறியடித்து மொட்டை மாடிக்கு சென்றுள்ளதாகவும், மேலும் அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் அவர்கள் சுதாரித்துக் கொண்டு அவர்கள் இருவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து  கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் தெரிய வருகிறது.

மேலும் இதில் கணேஷ் என்பவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருந்த ஷேக் அலாவுதீனுக்கு அம்மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here