திருவாரூர், மார்ச். 26 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு மற்றும் சென்னை இ.என்.டி. பௌண்டேசன் ஆஃப் ஸ்பீச் ஆகியோர் இணைந்து நடத்திய காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் அவ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்றது.
மேலும் இம்முகாமினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் துவக்கி வைத்தார். மேலும் இம்முகாமில் தலா ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான காதுக் கேட்கும் கருவிகளை காது கேட்காத, வாய் பேச முடியாத சிறப்புக் குழந்தைகள் 70 பேருக்கு வழங்கினார்கள். மேலும் ரூ.8 லட்சம் மதிப்பிலான அறுவைச் சிகிச்சைக்கு தேவைப்படும் தகுதியான 8 சிறப்புக் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் ஐந்து குழந்தைகளை இம்முகாமில் சென்னை இ.என்.டி. பௌண்டேசன் ஆஃப் ஸ்பீச் தேர்வு செய்துள்ளனர்.
மேலும் இச்சிறப்புமிக்க இம்முகாமில் திமுக நகர செயலாளர் வாரை எஸ். பிரகாஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன், கே எஸ் எஸ் தியாகபாரி, வழக்கறிஞர் மணிவண்ணன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா, நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினி ஜின்னா, இரா சங்கர், ஜி வரதராஜன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ராஜ் என்கின்ற கருணாநிதி, வி ஆர் என் பன்னீர்செல்வம், பள்ளி தாளாளர் நாகராஜ், முரளி உட்பட திமுகழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் இம்முகாமில் பங்கேற்ற சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


















