பாபநாசம், மார்ச். 10 –
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர் மணிரத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் பங்கேற்று, தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவிற்கு தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியைகள் கிராமமக்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று விழா சிறப்பாக நடைப்பெற துணைப் புரிந்தனர்.