திருவாரூர், டிச. 01 –

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த TN 07 AQ 6131 எண் கொண்ட AVEO காரை சோதனை செய்தபோது அதில் ஒரு லட்சம் மதிப்புள்ள 2650 வெளிமாநில  சாராய பாக்கெட்டுகளை  பாலித்தீன் பைகளில் போட்டு மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 180 வெளிமாநில மது பாட்டில்களையும் அதில் கடத்தி வந்துள்ளனர்.. இதனைத்தொடர்ந்து உடனடியாக பேரளம் காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த பூங்காவூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விமல் வயது 30 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தவரை அதிரடியாக கைது செய்த பேரளம் காவல்துறையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here