திருவள்ளூர், செப். 23 –
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில் (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா யோகேஷ் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரிபன்னீர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனிதா சகாதேவன் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் முதியோர் உதவித்தொகை, மற்றும் ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பட்டா புதுப்பித்தல். வேளாண்மை குறித்த தகவல். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மருத்துவ தேவைகள் என திரளானோர் முகாமில் கலந்து கொண்டு அவர்களுடைய விண்ணப்பங்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.
மேலும் இம்முகாமில் ஞாயிறு குறுவட்டம் வருவாய் அலுவலர் சந்தான லட்சுமி, சீமாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பிரியா, பகுதி சுகாதார செவிலியர் ஸ்டெல்லா, கிராம சுகாதார செவிலியர் சரஸ்வதி, இடைநிலை செவிலியர்கள் எஸ்தர், ஜெயசுதா, ராஜேஸ்வரி, பரிமளா, பிரீத்தா, தமிழ்ச்செல்வி தீபா, ராஜா, லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மேலும் கிராம பொதுமக்கள் பலரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
























