திருவாரூர், ஆக. 19 –
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறுதி ஆண்டு மருத்துவம் முடித்து விட்டு, அக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்து அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றிணை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும், அதில் தான் இந்த வேலைக்கு தகுதியான பெண் கிடையாது. எனவும், மன அழுத்தத்தின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரியா வருகிறது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே முழுமையான உண்மை நிலை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.