திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேற்று நடந்தது.
அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆட்சியர் பா.முருகேஷ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரயதர்ஷினி கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தாசில்தார் எஸ்.சுரேஷ் உள்பட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.