திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாநில தலைவர் ஜி.முத்து தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எம்.ஏழுமலை மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பழனி முருகன் டிஏஏகே மாநில பொதுச் செயலாளர் எம்.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில பொதுச் செயலாளர் நடுப்பட்டு கே.ரவி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, உலக பழங்குடியினர் தின விழாவை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பழங்குடியினரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சியை தமிழ்நாடு தடகள சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் துவக்கிவைத்தார்.
தமிழக பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு பழங்குடியினருக்கு 5 சதவித இடஒதுக்கீடு வழங்கவேண்டும் பழங்குடியினர் நலத்துறை தனியாக உருவாக்க வேண்டும் சட்டமன்றத்தில் 5 தொகுதிகளை பழங்குடியினருக்கென ஒதுக்க வேண்டும். இதேபோல ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக முழுவதும் பழங்குடியின மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வருங்காலங்களில் 100 குடும்பங்களை ஒருங்கிணைத்து பழங்குடியினர் கிராமங்களை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தன்னிகரற்ற கலைஞரால் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் இருளர் குடும்பங்களுக்கும் வழங்கிட வேண்டும் இருளர் பழங்குடியினருக்கு 3 சதவித உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் பெயரில் போலியாக பெறப்பட்ட பழங்குடியினர் இன சான்றுகளை கண்டறிந்து ரத்த செய்ய வேண்டும். தாட்கோவில் 50 சதவித மானியத்துடன் பழங்குடியினருக்கு நேரடியாக கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன் மாவட்ட சீனியர் தடகள சங்க தலைவர் பா.கார்த்திவேல்மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம், மாவட்ட பழங்குடியினர் நில அலுவலர் ப.அன்பழகன், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் எல்ஐசி து.வேலு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட தலைவர் ம.சுகுமார், பழங்குடியினர் கூட்டமைப்பு மாநில தலைவர் என்.கஜேந்திரன், மாநில துணைத் தலைவர்கள் ஏ.நீலகண்டன் ஏ.முருகன் மாநில துணை செயலாளர்கள் கே.முனுசாமி டி.அண்ணாதுரை மாவட்ட தலைவர் வி.மாயாண்டி மாவட்ட துணைத் தலைவர் எம்.முனுசாமி, மாவட்ட பொருளாளர் கே.பிரபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் தவமணி, ஜி.ரவி, ஏ.இந்திராணி, ஏ.சங்கீதா, சி.காந்தரூபி, சரிதா, உண்ணாமலை உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இளைஞரணி தலைவர் இ.சிவக்குமார் நன்றி கூறினார்.