காஞ்சிபுரம், ஆக. 07 –
முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து கலைஞர்கள் அமைதி பேரணியில் கலந்துக்கொண்டனர்.
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இப்பேரணி காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள பெரியார் தூண் அருகே துவங்கி, தேரடி, ரங்கசாமிகுளம், வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவுபெற்றது. அங்குள்ள அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.