கும்பகோணம், ஜூலை. 24 –
கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் நேற்று இரவு நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு தலைமை கொறடா கோவிசெழியன் பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரம் கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாணவர் அணி மாநில செயலாளர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கி இன்று காலை நிறைவு பெற்றது.
இப்போட்டியை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இப்போட்டியில் மயிலாடுதுறை, திருச்சி, காட்டுமன்னார்கோவில், மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 22 அணிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று காலை நினைவு பரிசும், பரிசுத்தொகையையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போட்டியில் முதலிடம் பெற்ற மயிலாடுதுறை ஆர்.எச்.பி அணிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி.கே.எம்.ராஜா ரூபாய்.20 ஆயிரத்து 20ம், இரண்டாம் இடம் பெற்ற பம்ப்ப படையூர் பாய்ஸ் அணிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் ரூபாய். 17 ஆயிரத்து 17 ம், மூன்றாம் இடம் பெற்ற வலங்கைமான் பாய்ஸ் அணிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு ரூபாய்.15 ஆயிரத்து 15ம், நான்காம் இடம் பெற்ற தேப்பெருமாநல்லூர் கிராஸ் ரூட் அணிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர் மற்றும் இளவரசி இன்பத்தமிழன் ஆகியோர் ரூபாய்.13 ஆயிரத்து 13ம் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்ட மயிலாடுதுறை இர்ஃபான்க்கு ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுராஜ், சிறந்த ஆல் ரவுண்டர், கஞ்சனூர் கார்த்திக்கு ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், சிறந்த லிப்ரோ, வலங்கைமான் மகேஷ்க்கு, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், சிறந்த செட்டர், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில், சிறந்த அணி, அன்பில் மகேஷ் பிரதர்ஸ்க்கு திருபுவனம் நகர் துணை செயலாளர் பாலா, சிறந்த சென்டர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், சிறந்த பிளாக்கர் தேப்பெருமாநல்லூர் சந்தோஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு, தலா ரூ.3003 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருபுவனம் பேரூராட்சி செயலாளர் பஞ்சநாதன் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் அம்மாசத்திரம் செந்தில் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.