கும்பகோணம், ஜூலை. 05 –
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே முகாமிட்டுள்ளது. அந்த பச்சைக்கிளியின் காலில் இரும்பிலான சிறு வளையம் மாட்டப்பட்டுள்ளது.
யாரோ வளர்த்த இந்த பச்சைக்கிளி வழி தெரியாமல் பறந்து வீட்டிற்குள் அலையா விருந்தாளியாக வந்த பச்சைக்கிளிக்கு தேவையான உணவையும் அளித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.




















