கும்பகோணம், ஜூன். 21 –

கும்பகோணம் அருகே  உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது கடந்த 5 வருடத்திற்கு முன்பு ஆலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆலை நிர்வாகத்தினர் ஆலையை மூடினர்.

அப்பொழுது ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 100 கோடி ரொக்கப் பணம் மற்றும் விவசாயிகள் பெயரில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் பெற்ற 350 கோடி என பல காரணங்களால் ஆளை இயங்காமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணம் தராமல் இருந்தது.

இந்த நிலையில் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வேறொரு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விலைபேசி விற்பனை செய்து விட்டது.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி புதிதாக விலைக்கு வாங்கிய தனியார் நிறுவனம் பூஜை போட வந்தனர். இதை அறிந்த விவசாயிகள் பூஜை போட வந்த நிறுவன அதிகாரிகளை  மறித்தனர். இதையறிந்த காவல்துறையினர் , வருவாய்த் துறையினர், விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருகின்ற 15ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஆலையை  திறப்பார்கள் என உறுதியளித்தனர்.

இதனடிப்படையில் 15ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என விவசாயிகள் திடீரென கும்பகோணம் -தஞ்சாவூர் சாலையில் உத்தாணி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 21ம் தேதி தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தன்  அடிப்படையில் இன்று தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தங்களுக்கு வழங்கவேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும் ,வாகனங்கள் மற்றும் வெட்டுக் கூலி, ஆகியவற்றை முழுவதையும் வழங்க வேண்டும், விவசாயிகள்  பெயரில் வங்கியில் பெற்ற கடனை அனைத்தையும் கட்டி, முடிக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை செய்து முடித்து விட்டு தாங்கள் ஆலையை திறந்து நடத்துங்கள் என கூறினர்.

இந்நிலையில், புதிதாக அவ்வாலையை விலைக்குப் வாங்கிய தனியார் சர்க்கரை ஆலையின் முதன்மை அதிகாரி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனுசாமி மற்றும் அந்த  நிறுவனத்தைச் சேர்ந்த கந்தசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர். காவல்துறை சார்பில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர்கள் அனிதா கிரேசி, அழகம்மாள், பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வருவாய் ஆய்வாளர் சுகுணா ,விவசாய சங்கம் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க பிரதிநிதிகள் காசிநாதன், தொண்டு முருகேசன், சரபோஜி, செந்தில்குமார் ,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ஹாஜாமைதீன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன், ஜெகநாதன், செல்வராஜ், மற்றும் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்படாததால், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தஞ்சை மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்  கூட்டம் பற்றி விளக்கிக் கூறி அவர் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட கூட்டம் நடத்துவது என முடிவு  செய்யப்படும் என கூறினார்.

அதனால் ஆலய நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் உடன்பாடு ஏற்படாததால் தற்சமயம் ஆலைத்  துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here