கும்பகோணம், ஜூன். 04 –

கும்பகோணம் அருகே  நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது  ஆண்டு தோறும் இக்கோயிலில் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில், சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு, ஆண்டுக்கு 15 தினங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் கருவறையில் அம்மன் உருவம் இல்லாமல் அருவமாக ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும் இதனையே அம்மனாக வழிபட்டு வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

வைகாசி ஆண்டு திருவிழாவினையொட்டி வெள்ளிக்கிழமை அரசலாற்றில் இருந்து செப்புக் குடத்தில் வைத்து கரகம் எடுத்து வந்து அதன் மீது நாணல் கொண்டு  திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் வைத்து ஆகாச மாரியம்மனாக  அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில்  அம்மனை எழுந்தருளச் செய்து நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க,   திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து இன்று காலை கோவிலை வந்தடைந்தது தொடர்ந்து,  புஷ்ப பல்லக்கில் இருந்து ஆகாச மாரியம்மனை, நாதஸ்வர மேள தாளம் முழங்க, ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து ஆலயத்திற்கு தூக்கி வரும் பொழுது, இருபுறமும் வெண் சாமரம் வீச, நூற்றுக்கணக்கான கண்ணாடிகள் கைவளையல் அடங்கி கொத்தை முன்னெடுத்து வரவேற்று செல்ல, தொடர்ந்து  கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மல்லிகையை பிரதானமாக கொண்டு, பலவிதமான நறுமண பூக்களை தூவி பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க, வரவேற்றனர் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

இதனைத் தொடர்ந்து  லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, இராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தினமும் காட்சியளிப்பார்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரிய திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி சிறிய தேரில் அம்மன் வீதியுலாவாக வந்து பின்னர் சமயபுரம் எழுந்தருளுடன் இவ்வாண்டுக்கான திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here