திருவாரூர், ஜூன். 04 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கலப்பால் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பூங்கொடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகள் வள்ளி வயது 27 என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி கணவன் சக்திவேல் குடித்துவிட்டு மனைவி வள்ளியை தினமும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் சண்டை முற்றி போனதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி வள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் தகவல் அறிந்த எரவாஞ்சேரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

மேலும் வள்ளியின் தந்தை நடராஜன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here