கும்பகோணம், மே. 27 –
சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளர். அதற்கு அவரது நண்பர் பாலா என்பவர் உதவி வந்தியிருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்த சிறுமியிடம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக இது குறித்து அந்த சிறுமி தனது தாயார் ராதாவிடம் தெரிவிக்கவே ராதா கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து அருண் குமார் பாலா இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.





















