நன்னிலம், மே. 18 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மாநிலப்பொதுச்செயலாளர் வேணு.பாஸ்கரன் , மாநில இளைஞர் அணி செயலாளர் நரசிம்மன், மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், மாநில துணைத்தலைவர் காசிநாதன், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் அருள் மற்றும் பாமக தொண்டர்களும் பங்கேற்றனர்.
மேலும், மாநில பொருளாளர் திலகபாமா மணிகண்டன் வீட்டில் இருந்த அவரது தாய் மற்றும் தந்தையார், இறந்த மணிகண்டனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தமிழக அரசு உடனடியாக மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சார்பாக கேட்டுக்கொண்டார்.




















