திருவிடைமருதூர், சனவரி. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,  திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில்  அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயிலின் பஞ்சமூரத்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனம் உருகி காண இனிதே தைப்பூச தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வின் முன்னதாக திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடி கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

மேலும் இத்திருத்தலம் காசிக்கு நிகரான தலமென முன்னோர்களால் கூறப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமா முலையம்மை உடனாகிய மகாலிங்கசுவாமி திருக்கோயில் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது

இங்கு ஒரே மண்டபத்தில் 27 நட்சத்திரங்கள் வழிப்பட்டு அருள்பெற்ற தனித்தனியான 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளது எனவே இது நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும், சந்திரன் வழிப்பட்டு பேறு பெற்றதால் சந்திரதலம் என்றும் போற்றப்படுகிறது.

திருவாவடுதுறை, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி, சீர்காழி, சூரியனார்கோயில், திருவாய்பாடி, முதலான பரிவாரத்தலங்கள் சூழ நடுநாயமாக இத்தலம் விளங்குவதால் இத் தலத்தினை பஞ்சலிங்கத்தலம் என்றும் போற்றப்படுகிறது

இத்திருக்கோயிலில் அசுவமேத பிரகாரத்தை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனையும், கொடிமுடி பிரகாரத்தை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் வந்த பலனை அடைவர் என்பதும் இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும் இத்தலத்தை போற்றி திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் முதலானோர் பாடல்கள் பாடியுள்ளனர் எனவும் தல வரலாறு கூறுகிறது. மேலும் இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று இவ்வாண்டு இவ்விழா கடந்த 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், பூதகி, யானை, சிம்மம், காமதேனு, கற்பக விருட்சம், கயிலாய, அன்னபட்சி, குதிரை, கிளி, என பல்வேறு வாகனங்களில் உலாவரும் நிகழ்வு நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10 ஆம் நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பிற்பகல், பெருநலமா முலையம்மன் மகாலிங்கசுவாமியும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களிலும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகப்பெருமான் மூஞ்சூறு வாகனத்தில் என பஞ்சமூர்த்திகளும் காவிரியாற்றங்கரையில் தீர்த்தவாரிக்காக எழுந்தருள, அதுபோலவே காஞ்சி மடத்திற்கு சொந்தமான ஒரே கோயிலான திருவிடைமருதூர் பிரசன்னவெங்கடேசப்பெருமாள் காவிரியாற்று பாலத்திலும் மற்றும் இடம் கொடுத்த ஈசன் தாயாருடன் காவிரியின் மற்றொரு கரையிலும் எழுந்தருள திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசன்னிதானம்  அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலiயில் முதலில் அஸ்திர தேவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து அஸ்திர தேவரை தோலில் சுமந்தபடி சிவச்சாரியார் காவிரியில் இறங்கி மும்முறை  காவிரி ஆற்றில் முங்கி எழ தைப்பூசத்தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதே சமயத்தில், காவிரி நதியில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கும், மகா தீபாராதனை செய்யப்பட்டது, அதனையடுத்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மனம் பூரிப்படைந்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here