பெரியமாத்தூர், ஏப். 24 –
சென்னை மாநகராட்சி 19ஆவது வார்டுக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் .அம்பேத்கர் மன்றத்தில், அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மன்றத்தலைவர் . பி.மகேந்திரன், செயலாளர் எம்.நாகராஜ், பொருளாளர் காமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். .எம்.நாகராஜன். ஜெய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர் .அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் இ.மெய்யழகன் கலந்துக் கொண்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மன்ற கொடியினை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்திவிட்டு, இனிப்புகளை அனைவருக்கும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அவ்விழாவில் சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில் தற்போது உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றான நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க இத்திட்டம் வரவேற்க தக்கது. என்றாலும், தற்போது நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேற்றும். நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் தீவிரம் காட்டி வருகிறது.
அத் தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு சற்று தளர்வு செய்து. நீர்நிலைகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும் .கட்டிட மதிப்பு தொகையும். காலஅவகாசமும் வழங்கி மக்களின் துயர் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக்குறிப்பிட்டு தமிழக அரசுக்கு மன்றத்தின் சார்பில் மனு அளித்து இருந்தும்.அந்த மனு நிராகரிக்க பட்டதாக தகவல்பெற்றேன்.
மேலும் வருகின்ற மே 1 ஆம், தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் அனைவரும் மனு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்சியில் புத்தர் கோயில் நாகராஜ். குமாரசாமி. ஜெயா .ஆனனந்தன். மற்றும் மகளிர் குழுவினர்.கலந்துக் கொண்டனர்.
























