பொன்னேரி, ஏப். 23 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் கல்வி பயின்று வருவதால் எம் எல் ஏ துரை சந்திரசேகருக்கு தகவல் வந்தது.
அதனை அறிந்தவர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி அந்த பிள்ளைகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான செலவை அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பரட்டு ஜி. ரவி. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன். கிராம ஊராட்சி ரவி. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம். உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இன்று காலை 9 மணி அளவில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நடத்தி அடிக்கல் நாட்டினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகா .மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.




















