திருநின்றவூர், ஏப். 17 –
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா நிகழ்ச்சி ஏ. கே. ரோஸ் நாயுடு ஏற்பாட்டில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம நாயுடு மாநிலத் தலைவர் ரவீந்திரன் கொங்கு நாயுடு மற்றும் மாநில செயல் தலைவர் மோகன் நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கூறுகையில் கம்ம நாயுடு மகா ஜன சங்கம் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் யுகாதி தினத்தை முன்னிட்டு கம்ம குல குடும்ப விழா நடைபெற்று வருதாகவும், மேலும் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இதுப்போன்ற விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் தமிழ்நாடு கம்ம நாயுடு இனத்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட கம்ம நாயுடு குடும்பங்கள் கலந்து கொண்டனர். இந்த குடும்ப விழாவில் அவர்களது பிள்ளைகள் விழா மேடையில் தெலுங்கு பட பாடலுக்கு நடனமாடி விழாவிற்கு வந்தவர்களை மகிழ்வித்தனர்.