பட்டுக்கோட்டை, மார்ச். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று நடைப்பெற்றது.

அக் கொடி அணி வகுப்பு பேரணியில் முன்னதாக பேண்ட் வாத்தியம் முழங்க பின்பு பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, அறந்தாங்கி ரோடு முக்கம், சாமியார் மடம், மார்க்கெட், பெரிய கடைத்தெரு, பெரிய தெரு வழியாக மீண்டும் மணிக்கூண்டு வந்தடைந்தது. தொடர்ந்து அது நகர காவல் நிலையத்தில் நிறைவுப் பெற்றது.

பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் நடந்த கொடி அணிவகுப்பு பேரணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், காவலர்கள் உள்பட வஜ்ரா வாகனத்துடன் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்குப் பெற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here