கும்பகோணம், மார்ச். 29 –

கும்பகோணம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனையில், டாக்டர் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் குத்துவிளக்கேற்றி வைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனையில், மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

இம்முகாமில் மாநகர் நல அலுவலர் மரு. பிரேமா, பொது மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை, பல் சிகிச்சை, தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு, உறுப்பு மாற்று, குறை இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, பிசியோ சிகிச்சை, இசிஜி, பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமாக நோய்களுக்கும் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையுடன், அதற்காண மருத்து மாத்திரைகளும் தேவையானவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இம்முகாம் இன்று நடைபெறுவது குறித்து மாநகராட்சி பொதுமக்களுக்கு முன்னதாக தெரியப்படுத்திட உரிய முயற்சிகள் எடுக்காததால், பொது மக்கள் யாரும் இதில் பெரிய அளவில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது, இதனால், இந்நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ, மாநகராட்சி உறுப்பினர்கள் மட்டும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

அரசு பல ஆயிரம் செலவு செய்து ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என இத்தகைய முகாம்களை நடத்திய போதும், மாநகராட்சி அலுவலர்களின் அலட்சிய போக்கினால், மக்களின் வரிப்பணம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் வீணாவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here