பழவேற்காடு, மார்ச். 25 –
பழவேற்காடு அருகே இருந்து ஆந்திரவிற்கு படகு மூலம் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த இருந்த கும்பலிடம் இருந்து கடலோர காவல் படையினர் துரிதமாக செயல் பட்டு ரேசன் அரிசியை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்புபடை குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில், கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில். கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சுரேஷ்குமார். மற்றும் உதவியாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர். அதிரடியாக ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாகனத்தையும். கடலில் கடத்துவதற்காக பயன்படுத்தப்படும் படகுகளையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அதில் 50 கிலோ எடையுள்ள 60 அரிசி மூட்டைகள் சுமார் 3 டன் ரேஷன் அரிசியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து கூணங்குப்பம். அறங்கம்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ். சுரேந்தர் .என்பவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர் . மேலும் இந்த அரிசி மூட்டைகள் ஆந்திராவிற்கு படகு மூலம் கடத்தப்பட இருந்ததாகவும் தெரிவித்தனர்.






















