கும்பகோணம், மார்ச். 25 –

கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரேப்பீ சரவணன் ( 35) கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ரவுடி பட்டியலில் இவரது பெயரும் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மணஞ்சேரி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி சரவணன் பலத்த காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சரவணன் உயிரிழந்தார் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here