செங்கல்பட்டு, மே. 15 –

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் 18-வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை சேலம் மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை விளாயாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

மேலும், இக்குத்து சண்டை விளாட்டுப் போட்டியில் 52 அணிளைச் சேர்ந்த, சுமார் 750 – க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக 300 போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இறுதி சுற்று நடைபெற்றது. இறுதி நாளான மே 14 ஆம் நாளான நேற்று  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் லட்சுமி காந்தன் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

மேலும் இவ்விளாயாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் தங்க பதக்கமும், 2-வது பரிசாக 25,000-ரூபாய் மற்றும் வெள்ளி பதக்கமும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here