PIC FILE COPY

திருவண்ணாமலை, மார்ச்.20-

திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய மினி மராத்தான் போட்டி திருவண்ணாமலை கிரிவல பாதை செங்கம் சாலை சந்திப்பில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியினை எஸ்பி பவன்குமார் ரெட்டி சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

5 கி.மீ. தூரம் ஆண்கள் பெண்கள் என இருபிரிவான நடைபெற்ற மராத்தான் போட்டி கிரிவல பாதையிலுள்ள அபாய மண்டபம் பகுதியில் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள்பிரிவில் செங்கத்தைச சேர்ந்த ரவிகுமாரும் பெண்கள் பிரிவில் திருவண்ணாமலையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிராமி ஆகியோர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு தமிழ்நாடு தடகள சங்க மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.7ஆயிரம் 2ம் பரிசு 5 ஆயிரம் 3ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கியதோடு சான்றும் வழங்கினார்.

முன்னதாக மினிமராத்தான் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் வாசிக்க போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here