பொன்னேரி, மார்ச். 13 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க உதவி ஆணையர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர்  புகைப்பட உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை, மற்றும் நாள்காட்டி, தினசரி குறிப்பேடு  ஆகியவற்றை வழங்கினார்கள். இந் நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வார் மார்டின்  திருவள்ளுா் மாவட்டத்தில் புகைப்பட சங்க கலைஞர்களுக்கு சொந்த கட்டிடம் இருப்பது பாராட்டுக்குரியது. என்றும், இனி வரும் காலங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு காவல் துறை என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக மறைந்த புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில்  மாவட்ட தலைவர் ஹேமகுமார் என்கின்ற பாபு  மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட அமைப்பாளர் அப்பாஸ் அலி, மாவட்ட துணைத்தலைவர் ஹரிதாஸ், மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், பொன்னேரி கிளை தலைவர் சிவக்குமார் செயலாளர் நடராஜன் பொருளாளர்  கார்த்திகேயன் அமைப்பாளர் சம்பத்குமார் துணைத் தலைவர் சதீஷ் துணைச் செயலாளர் தென்பாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here