ஆர்.கே.பேட்டை, மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலோத்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கோதண்டம் வயது 47 என்பவர் அப்பகுதியில் சுஜி பிளாஸ்டிக் ஒர்க்ஸ் எனும் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
சம்பவம் நாளான பிப் 16 ஆம் தேதி அன்று அவரது தொழிற்சாலை அருகே காரில் செல்லும் போது, அதே ஊரைச் சேர்ந்த கமலநாதன் என்பவரின் மகன் சசி வயது 24, சதீஷ் வயது 26, அம்சம்மாள் வயது 65, கமலநாதன் வயது 46, கமலநாதன் மனைவி உஷா வயது 42, ஆறுமுகம் என்பவரின் மகன் சேகர் என்ற பிரவீன் வயது 40 ஆகியோர் அவரது காரை மறித்து தகாத வர்த்தைகளால் திட்டியும் கற்கள் மற்றும் கைகளால் தாக்கியும் மேலும் உனது மாற்றுத்திறனாளி பிள்ளையை வைத்துக்கொண்டு எங்களை உன்னால் ஏதுவும் செய்ய முடியாதென ஆயுதங்களால் அடித்தும் மிரட்டியும் உள்ளனர்.
என மேற்படி கூறியப்படி சுஜி பிளாஸ்டிக் ஒர்க்ஸ் நிறுவன உரிமையாளர் கோதண்டம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அப்புகார் மனுவில் தன்னை திட்டியும் ஆயுதம் மற்றும் கைகளால் தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் படி தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை ஆர்.கே.பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















