செங்கம் பிப்.15-

திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

செங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்.  தலைமை காவலர் செந்தில்குமரன் செங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தவிருக்கும் போராட்டங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே சேகரித்து எஸ்பி  மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு உடனுக்குடன் தெரிவித்ததின் பேரில் உயரதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருந்துள்ளனர்.

இதேபோல் கடலாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் கடலாடி, காவல் நிலையங்களில் பதிவான பலவாறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து சொத்துகளை கைப்பற்ற உதவியாக இருந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தண்டராம்பட்டு காவல்  நிலைய காவல் ஆய்வாளர் தனலட்சுமி தண்டராம்பட்டு காவல் வடடத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் 260 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தும், 9 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், 269 வழக்குகளை நீதிமன்ற கோப்பிற்கு எடுக்க செய்தும், 254 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தில் தண்டனை வாங்கி கொடுத்தும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் சிறப்பாக செயல்பட்ட செங்கம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பாராட்டு தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here